வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (09/09/2017)

கடைசி தொடர்பு:11:16 (09/09/2017)

பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 


ஜெயலலிதா இறப்புக்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் பா.ஜ.க அரசுடன் இணக்கமான சூழலையே பின்பற்றிவந்தனர். எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைவதில் பா.ஜ.க-வின் பங்கு இருந்ததாகவே கருதப்பட்டுவந்தது. பா.ஜ.க-வைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் தமிழக அரசை விமர்சிக்கவில்லை. ஆளும் அரசு உறுப்பினர்களும் மத்திய அரசை எந்த ஒரு சூழலிலும் விமர்சிக்காமலேயே இருந்துவந்தனர்.

எனவே, வரும் காலங்களில் இரு கட்சிகளும் கூட்டணிவைத்து தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று கருதப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது தவறில்லை' என்று தெரிவித்தார். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'அனைத்து எம்.எல்.ஏ-க்களும் எங்களது அணியில்தான் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க-வுடனான கூட்டணி கூறித்து பரிசீலிக்கப்படும்' என்று தெரிவித்தார்.