Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நல்லகண்ணு, ஸ்டாலின் வேண்டுகோள்! உண்ணாவிரதத்தை கைவிட்டனர் மாணவர்கள்

உண்ணாவிரதம்

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் எட்டு மாணவர்கள் நடத்திய வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் முடித்து வைத்தனர்.

நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா மரணம் நீதி விசாரணை கேட்டு திருச்சி கி.ஆ.பெ.வி மருத்துவக்கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவைச் சேர்ந்த தினேஷ், ஜீவானந்தம், சேக்அப்துல்லா, சூர்யா, ரியாத் நிஷா ஆகிய 5 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகின்றனர். 5-ம் நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த சூர்யா  மயக்கம் ஏற்பட்டதால் மயங்கினார். அதைத் தொடர்ந்து மயக்கமடைந்த சூர்யா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் அடுத்த நாளில் இருந்து போராட்டம் தொடர்ந்தது.

தூக்கு மாட்டிக்கொண்டு போராடுவது, முகத்தில் கருப்பு மை பூசிக்கொண்டு போராடுவது, பிணமாகப் படுத்து போராடியது எனப் பல விதமான நூதனப் போராட்டங்களை நடத்தினார்கள். மேலும் போராடுபவர்களை, மகேந்திரன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து வந்தனர். உச்ச நீதிமன்றம் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுபவர்களுக்குப் பல வழிகாட்டுதல்களை நேற்று கூறிய நிலையில் தமிழகம் முழுக்க, நீட் தேர்வுக்கான போராட்டங்களுக்குக் காவல்துறை நெருக்கடிகள் கொடுக்க ஆரம்பித்துள்ளன. அனைத்துக்கட்சிகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக வரும் 13-ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சற்று முன் உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்கு தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், நல்லகண்ணு ஆகியோர் வருகை தந்தார்கள். போராட்டக்களத்தில் போராடும் இளைஞர்களுடன் உட்கார்ந்த ஸ்டாலின், போராடும் இளைஞர்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுகோள் வைத்தார். நல்லகண்ணு போன்றவர்களும் பேசினார்கள். அதைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

இறுதியாக ஸ்டாலின், “நீட் தேர்வில் பொது விலக்கு வேண்டும், ஒரு தாழ்த்தப்பட்ட மாணவி மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என இந்த இளைஞர்கள் ஒரு வாரக் காலமாக உண்ணாவிரதமிருந்து உடலை வருத்தி இருக்கிறார்கள். இவர்களின் உணர்வை எண்ணிப்பார்த்து மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற போராட்டங்களைப் பார்த்தபிறகும், நடவடிக்கை எடுக்காமல் கொடுமைப்படுத்துவது எந்தவிதத்தில் சரி. போராடுபவர்களை அச்சுறுத்துவது, ஒடுக்குவது, கைது செய்வது ஆகிய செயல்களில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்றார்.

அதேபோல் நல்லகண்ணு, “நீட் தேர்வைக் கண்டித்து அனிதா இறந்திருக்கிறார். அன்றிலிருந்து தமிழகம் எங்கும் போராட்டங்கள் தொடருகிறது. இதேபோல் திருச்சியில் தினேஷ் தலைமையில் எட்டாவது நாளாக உண்ணாவிரதம் தொடருகிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் தொடரும் எனவும் 13-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. நாடுமுழுக்க முற்போக்குவாதிகள் கொலை செய்யப்படுகிறார்கள். ஆட்சியாளர்களிடம் நேர்மை எதிர்பார்க்க முடியாது. இட ஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்த்து நீட் வைத்திருப்பது, மாநில அரசு, மத்திய அரசோடு சேர்ந்துக்கொண்டு, நீட் தேர்வை ஆதரிப்பது அநீதியானது” என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close