Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் சட்டநகல் எரிப்புப் போராட்டம் ரத்து: மாற்று போராட்டம் அறிவித்தார் திருமாவளவன்

வரும் 9-ம் தேதி நடைபெறயிருந்த நீட் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அதற்கு மாறாக வரும் 16-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் நாளை (9.9.2017) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த " நீட் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்" மாணவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு தவிர்க்கப்படுகிறது. 'நீட்' தேர்வு தொடர்பாக நடந்த பொதுநல வழக்கொன்றில், உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு அளித்துள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில், சட்ட நகல் எரிப்புப் போராட்டத்துக்குக் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். அதையும் மீறி ஏற்கெனவே அறிவித்தபடி, நமது மாணவர்கள் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்தினால், அவர்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகநேரிடும். வழக்கு, கைது, சிறை என அவர்கள் சில நெருக்கடிகளைச் சந்திக்கும் சூழல் உருவாகலாம். எனவே, தற்போதைக்கு அப்போராட்டத்தைத் தவிர்ப்பதென முடிவுசெய்யப்படுகிறது. அதேவேளையில், அதற்கு மாறாக வரும் 16.9.2017 அன்று அனைத்து மாவட்டங்களிலும் 'உண்ணாநிலை அறப்போராட்டம்' நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், முற்போக்கு மாணவர் கழகத்தைச் சார்ந்த பொறுப்பாளர்களும் மாணவர்களும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னணி பொறுப்பாளர்களுடன் இணைந்து இப்போராட்டத்தை வெற்றிகரமாக ஒருங்கிணத்திட வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close