மாணவர்களின் படிப்பில் நீதிமன்றம் தலையிடுகிறது! சீமான்

குடிப்பதில் தலையிட முடியாது என்று கூறும் நீதிமன்றம் மாணவர்கள் படிப்பதில் தலையிடுகிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான வழியில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று உத்தரவிட்டது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 'நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அமைதி வழியிலேயே மாணவர்கள் போராட்டம் நடத்திவரும்நிலையில், நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்புகிறது. நாட்டில் நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகமா, நீதிமன்ற ஜனநாயகமா?' என்று கேள்வி எழுப்பினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!