Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே ஸ்டேஷனில் நீண்டகாலப் பணி... 36 தனிப்பிரிவு போலீஸார் அதிரடி மாற்றம்!

ஒரே ஸ்டேஷனில் நீண்டகாலமாகப் பணியாற்றி, போலீஸ் ஸ்டேஷனையே கட்டுப்பாட்டில் வைத்திருந்த 36 தனிப்பிரிவு போலீஸார் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

நெல்லை எஸ்.பி

நெல்லை மாவட்டத்தில் 63 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் 61 காவல்நிலையங்களில் எஸ்.பி தனிப்பிரிவு போலீஸார் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் ஒரே ஸ்டேஷன்களில் நீண்டகாலமாகப் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட எஸ்.பி-க்கு நேரடியாகத் தகவல் அளிக்கும் பொறுப்பில் இருப்பதாலும் நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியில் இருப்பதாலும் ஸ்டேஷன்களையே தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாகச் சிலர் மீது புகார்கள் வந்தன.

உள்ளூர் ரவுடிகளுடன் தொடர்பில் இருப்பது, ஸ்டேஷன்களில் கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகச் சிலர் மீது புகார்கள் வந்தன. இவர்களை மீறி உள்ளூர் இன்ஸ்பெக்டர்களால்கூட செயல்பட முடியாத நிலை இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது குறித்து நெல்லை மாவட்ட எஸ்.பி  அருண்சக்தி குமார், ரகசியமாக விசாரணை நடத்தினார். அப்போது, இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்கிற அளவுக்கு சிலர் நடந்துகொள்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை மாவட்டத்தின் வேறு ஸ்டேஷன்களுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தனிப்பிரிவு மாற்றம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள 36 தனிப்பிரிவு போலீஸார் ஒரே சமயத்தில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக, தாழையூத்து தனிப்பிரிவு எஸ்.ஐ மானூருக்கும், மானூரில் பணியாற்றிய தனிப்பிரிவு ஏட்டு தாழையூத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். அத்துடன், பாளையங்கோட்டை தாலுக்கா, சிவந்திபட்டி, அம்பாசமுத்திரம், செங்கோட்டை, கடையம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், சுரண்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட 36 ஸ்டேஷன்களில் பணியாற்றிவர்களை மாற்றம் செய்து நெல்லை மாவட்ட எஸ்.பி-யான அருண்சக்தி குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close