வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (09/09/2017)

கடைசி தொடர்பு:15:06 (09/09/2017)

அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து ஜக்கையன் நீக்கம்! டி.டி.வி.தினகரன் அதிரடி

அ.தி.மு.க அம்மா அணியின் அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து எம்.எல்.ஏ ஜக்கையனை நீக்குவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். 


முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் சமீபத்தில் இணைந்தனர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. மேலும் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து டி.டி.வி.தினகரனுக்கு 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்தனர். டி.டி.வி.தினகரன் அவ்வப்போது, தனக்கான துணைப் பொதுச்செயலாளர் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு எதிராகச் செயல்படுபவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துவருகிறார். நேற்று முன் தினம், டி.டி.வி.தினகரன் அணியிலிருந்த எம்.எல்.ஏ ஜக்கையன், எடப்பாடி பழனிசாமி அணிக்குச் சென்றார். இதையடுத்து ஜக்கையனை, அ.தி.மு.க அம்மா அணியின் அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.