Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

திண்டுக்கல் நகரில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நகை திருடர்களை கண்காணிப்பதற்காக திண்டுக்கல் நகர் முழுவதும் சிசிடிவி கேமராவை போலீசார் பொருத்தியுள்ளனர். ஆனாலும், நகை பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. பஸ் நிலையம் உள்பட மக்கள் அதிகம் நடமாடும் பகுதியிலேயே பைக் கொள்ளையர்கள் பெண்களிடம் நகை பறித்து செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பட்டபகலில் திருநகரை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணிடம் காட்டாஸ்பத்திரி அருகே ஆறு பவுன் நகை பறிக்கப்பட்டது. ரவுண்ட் ரோட்டில் பூரணம் என்பவரது கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்க நகையை பைக்கில் வந்த வாலிபர்கள் பறித்து சென்றனர்.இதை தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், தனிப்படை ஒன்றை அமைத்தார். இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

SP Sakthivel

இந்நிலையில், தனிப்படை போலீசார் விசாரணையில் காமராஜ் நகரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, மாரிமுத்து உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திண்டுக்கல் அனுமந்தன்நகரை சேர்ந்த கார்த்தி (30) என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இவர் மீது பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் கைதாகி சிறை சென்றுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட தட்சிணாமூர்த்தி உள்பட மூன்று பேரும் கரூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு கல்லூரி முடிந்த நேரங்களில் இதுபோல நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்கள். இது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேலிடம் பேசினோம். ''காலோஜ் படிக்குறப்ப ஆடம்பரமா செலவு செய்ய வீட்டுல பணம் கொடுக்கமாட்டாங்க. வீட்டுல இருக்க பசங்களுக்கு பெற்றோர் கண்காணிப்பு இருக்கும். ஆனால், வெளிய தங்கி படிக்குற பசங்க, கூட இருக்க பசங்க சொல்றதைக் கேட்டு இது மாதிரியான தவறான செயல்கள்ல ஈடுபடுறாங்க. இந்த பசங்களை பொறுத்தவரைக்கும் பெரிய குற்றசம்பவங்கள்ல தொடர்புடையவங்களா தெரியலை. என்ன செய்றோம். இதனால என்ன விளைவுகள் வரும்னு யோசிக்காம விளையாட்டுத்தனமா செஞ்சிருக்காங்க. மாணவர்கள் இதுப்போன்ற சம்பவங்கள்ல தங்களோட கவனத்தை செலுத்தி வாழ்க்கையை கெடுத்துக்காம, படிப்புல மட்டும் கவனம் செலுத்தணும்'' என்றார். 
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close