Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அ.தி.மு.கவில் மதிக்கத்தக்க தலைவர்கள் யாரும் இல்லை' - கொதிக்கும் ஆர்.எம்.வீரப்பன்

இன்றைய சூழலில் அ.தி.மு.கவில் மதிக்கத்தக்க தலைவர்கள் யாரும் இல்லை என்று எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் கருத்து தெரிவித்துள்ளார். 


அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் சமீபத்தில் ஒன்றிணைந்தன. அணிகள் இணைப்புக்கு எதிராக அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் குரல் கொடுத்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கூறி, உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநர் வித்யாசாகர் ராவை வலியுறுத்தி வருகின்றன. 

இந்தசூழலில் அ.தி.மு.கவின் நிறுவனர் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், அந்த கட்சியின் இன்றைய நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அ.தி.மு.கவில் மதிக்கக்கூடிய தலைவர்களே இன்றைக்கு இல்லை. அந்த அ.தி.மு.கவை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். இன்றைக்கு 2 கோடி, 3 கோடி, 5 கோடி ரூபாய் என்று வியாபாரத்திலே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து மேலும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement