Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அழியப்போகும் மரங்களுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம் !

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த உசிலம்பட்டி கிராம பகுதியில் உள்ள பெருமாள் மலையில் இயற்கை வளங்களை அழித்து கற்களை வெட்டி எடுக்க உள்ளதாக அப்பகுதி மக்கள் இரண்டு வருடங்களுக்கு மேல் போராடிவருகின்றனர் .

போராட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அங்கு கல் குவாரிகளுக்கு ஏலம் விடப்படாது என்று தெரிவித்த பின்னர் தங்களது போராட்டங்களை கைவிட்டனர். இந்நிலையில் அந்த மலையில் கற்களை வெட்டி எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஏலம் விட்டு  அனுமதி கொடுத்து விட்டது என்ற தகவலால் மீண்டும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அந்த பகுதியை சேர்ந்த முத்துராஜ் மற்றும் தனசேகரன்  கூறுகையில், ”எங்கள் பகுதியில் உள்ள பெருமாள்மலை அழகு கொஞ்சும் இயற்கை வளம் கொண்டது. இதை அழிக்கும் விதமாக கற்குவாரி வர உள்ளது. இதனை கண்டிப்பாக தடுக்க வேண்டும், இல்லை என்றால் இப்பகுதி விவசாயமும் நிலத்தடி நீரும் அழிந்து போகும். தற்போது தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக போராடிவருகிறோம். நேற்று பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர் . பெருமாள் மலையை  சுற்றி கொய்யா, மா உள்ளிட்ட பல மரங்கள் உள்ளன . இங்கு கல்குவாரி வந்தால் இந்த மரங்கள் எல்லாம் அழிந்துவிடும் அதனால் கொய்யா மரங்களுக்கு மாலை அணிவித்தும் மார்பில் அடித்துக்கொண்டு நூதன முறையில் அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தினோம் . அரசு இதற்கு சரியான தீர்வு வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close