Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' - தென்னை விவசாயிகள் கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக தேங்காயின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 


கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை விவசாயம் அதிகப்படியாக நடந்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தென்னை மரங்கள் கருகி போய் விட்டன. பல இடங்களில் தென்னை மரங்கள் கருகும் நிலையில் உள்ளது. தொடர்ந்து பருவ மழை பொய்த்து போனதால், விவசாயிகளும் கவலை அடைந்து உள்ளனர். கருகி  வரும் தென்னை மரங்களை காப்பாற்ற ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மோட்டார்கள் மூலமும்  தண்ணீர்  பாய்த்து வருகிறார்கள். மழை பெய்யா விட்டால் பல இடங்களில் தென்னை விவசாயம் அழிந்து விடும் சூழல் உருவாகி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள தென்னை மரங்களுக்கு அரசு சார்பில் நிவாரணங்களும் இது வரை வழங்கப்பட வில்லை. குமரிமாவட்டத்தில் விளையும் தேங்காய்கள்  வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது உள்ள சூழலில் தேங்காய் உற்பத்தி குறைந்து உள்ளதால் ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் விவசாயிகள்  கோரிக்கை வைத்து உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் நெல், தென்னை, வாழை, ரப்பர் போன்றவை விவசாயிகளால் அதிகமாக பயிரிடப் படுகின்றன. ரப்பருக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதி அடைந்து வரும் நிலையில், தேங்காய்க்கும் உரிய விலை கிடைக்காமல் தென்னை விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியால் ஏராளமான தென்னை  மரங்கள் பட்டு போனதால் தேங்காய் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பட்டுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தேங்காய்களை இறக்குமதி செய்து வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். குமரிமாவட்டத்தில் இருந்து  பெரும்பாலும் கேரளாவிற்கு ஏற்றுமதியாகி வந்தது.

ஒரு கிலோ தேங்காய் ரூ.30 வரை வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வந்தனர். ஆனால், அதன் விலை படிப்படியாக குறைந்து ரூ.11-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் உரிக்காத தேங்காய் ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் தேங்காய்க்கு உரிய விலைகேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்நிலையில், குறைந்திருந்த தேங்காய் விலை மெல்ல உயரத்தொடங்கியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தேங்காய் ரூ.19-க்கு விற்பனையானது. தற்போது மேலும் உயர்ந்து தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூ. 35-க்கு விற்பனையாகிறது. தேங்காய் உற்பத்தி குறைந்த நிலையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். பட்ட மரங்களுக்கு அரசாங்கம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.                                                                          

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close