Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆட்களே இல்லாத பொதுக்கூட்டத்தில் வெளுத்து வாங்கும் பொன்.ராதாகிருஷ்ணன்!

 

கடந்த 8-ம் தேதி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக நடந்த கண்டனப் பொதுக்கூட்டம் நடத்திய அதே திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், மறுநாளான நேற்று இரவு பி.ஜே.பி கட்சி சார்பில் சந்தர்ப்பவாத கூட்டணியின் அவதூறு பிரசாரத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தியது.

கூட்டத்தில் பேசிய பலரும், தி.மு.க உள்ளிட்ட அனைத்துக்கட்சியினரை சகட்டுமேனிக்கு விளாசினார்கள்.

கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம்,

" மோடி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னாள், தான் வெற்றி பெற்றால், இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும், 15லட்சம் வழங்குவதாகக் கூறி மோசடி செய்து விட்டதாக தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் கூறினார். அப்படி ஒருபோதும், பிரதமர் மோடி உறுதி அளிக்கவில்லை.சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டால் அதற்கு வாய்ப்புள்ளது" என்றார்.

முதலில் தமிழிசை செளந்தர்ராஜன்,

அனிதாவின் மரணத்தில் அரசியல். ஆனால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது என்ன செய்தீர்கள் ஸ்டாலின். தி.மு.க-வைத் தமிழகத்தில் அப்புறப்படுத்த அழைக்கிற கூட்டம் பா.ஜ.க-வின் கூட்டம். பாவிகள் ஆண்ட தமிழகத்தை காவிகள் ஆளும். மேலும் அவர், ஸ்டாலின் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தவர், தமிழக மசோதாக்கள் எங்கே. அதை என்ன செய்தோம். என்பதை நட்டா சொல்லியிருக்கிறார்.காரணம் ஒரு ஆண்டிற்கு மட்டும்தான் விலக்கு எனச் சொன்னாரே.? மாட்டு இறைச்சிக்கு அவசரச் சட்டம் அல்ல அது ஒரு திருத்தம். மீனவர்கள் பிரச்னையில் கச்சத் தீவை தாரை வார்த்த கட்சி தி.மு.. 18 ஆண்டு இருந்து விட்டு கச்சத் தீவை மீட்டிருக்கலாமே. தமிழகத் தேர் பற்றி எரியாமல் இருக்க பா.ஜ.க, ஆர்எஸ்எஸ் என்கிற கண்ணன்கள் தேவை. இது தர்மயுத்தம். 13-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் என்றார். இறுதியில் ஸ்டாலின் அவர்களே, உங்கள் கட்சியில் குடும்ப அரசியல் தவிர்த்த ஒருவரை வாரிசு அரசியலற்ற ஒரு தலைவரை தி.மு.க-வில் காட்ட முடியுமா" என்றார்.

இறுதியாகப் பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,

“அனிதாவின் மரணச் செய்தி கேட்டவுடன் வேதனையுற்றேன். அநியாயமாகக் கொன்று விட்டார்கள். எப்போதெல்லாம் தி.மு.க சரிவு காணுகிறதோ பிணத்தின்மீது அரசியல் செய்வதில் வல்லவர்கள் என்பதை உணர்ந்தேன். இது போன்ற வாய்ப்பு எதிர்பார்த்தேன். மாணவர்கள் அரசியல்வாதிகள் கருத்துக்கு அடிபணிந்து படிப்பதை நிறுத்தி விட வேண்டாம் என்று சொன்னோம். அ.தி.மு.க, தி.மு.க அனைத்தும் சொன்னது நீட் தேர்வு நடக்க விட மாட்டோம் என்கிறார்கள்.. இந்தக் கொலைக்கும் தி.மு.க-வுக்கும் சம்மந்தம் உண்டு. கல்லூரி மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தி.மு.க எப்படிப் பயனடைந்தது என்பதை உணருங்கள். ஆதாயம் அடைய ஒரு கூட்டணி காத்திருக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் அழிவுதான் நோக்கம். குண்டு அடிப்பட்டவர்கள் எத்தனைப் பேர்களுக்கு உதவி செய்திருக்கிறீர்கள்.

மேலும், சந்தர்ப்பவாத கூட்டணியால் தி.மு.க-வை சுமக்க நல்ல கூட்டம் கிடைத்திருக்கிறது. தளபதி தன்னுடைய அப்பாவிடம் சரியாக அரசியல் பயிலவில்லை என்பதே உணராமல் விட்டார். இன்று கலைஞர் இருந்திருந்தால் தி.மு.க கூட்டணியின் ஒரு கட்சிகூட உடன் இருக்க அனுமதித்திருக்கமாட்டார். இவர்களுக்குச் சமூகநீதி காக்க என்ன யோக்கிதை இருக்கிறது. ஆயிரக்கணக்கான பள்ளிகளில் 20-க்கும் கீழான மாணவர்கள். பல அரசுப்பள்ளிகள் மூடப்படுகிற நிலையை உருவாக்கியது திராவிட ஆட்சிகளின் துரோகம். கொலை காரர்களை உங்கள் வீட்டில் சேர்க்காதீர்கள். மாணவர்கள் மன்னிக்கமாட்டார்கள். தனியார் பள்ளிகள் வளரக் காரணம் தி.மு.கதான். ஏதாவது ஒரு தனியார் பள்ளியில் இலவச கல்வி உண்டா, குறைவான கட்டணத்தில் கல்வி உண்டா. காரணம் தனியார் பள்ளி துவங்க லஞ்சம். இந்தத் துரோகத்தை மன்னிக்க முடியாது.

கேந்திரிய வித்யாலயாவில், எனத் தமிழகத்துக்கு பத்து நவோதயா பள்ளி கேளுங்கள் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதினேன். பதில் இல்லை. ஒரே ஒரு நவோதயா பள்ளி கூட தமிழகத்தில் இல்லை. தி.மு.க-வின் தலைவர்களே. ஏன் தமிழ் சமூகம் முன்னேற, திட்டமிட்ட சதி. தி.மு.க-வின் பின்னால் பல்வேறு கட்சிகள் உள்ளது. கேந்திர வித்யாலயாப்பள்ளியின் சார்பில் போராட்டம் நடத்தினால் வரவேற்கத் தயார். நேற்று மேடையில், 1967 காலம் திரும்பாது. இரண்டு மதம் அமைதியாக இருப்பதை விரும்பாது திராவிட கட்சிகள்.

போராட்டக்காரர்களைத் தயவு செய்து இன்னொரு கட்சி அலுவலக வாயிலில் போராட அனுமதிக்காதீர்கள். அப்படி அனுமதித்தால் அரசாங்கமே கலவரத்துக்கு அனுமதி கொடுத்தது போலாகும். அரசாங்கம் இதைத் தடை செய்தாக வேண்டும். பா.ஜ.க அதற்காகப் பயந்துவிடவில்லை.” என முடித்தார்.

பின்குறிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் பேசி முடிப்பதற்குள் பாதிக்கூட்டம் காலியாகிப் போனது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close