Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வுக்கு ஆதரவாக 14-ம் தேதி போராட்டம்..! - தமிழிசை சௌந்தர்ராஜன்

செப்டம்பர் 14-ம் தேதி மாநிலம் முழுவதும் நீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். 


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், 'நுங்கம்பாத்தில் நேற்று மாணவிகளை போராட்டம் நடத்தவைத்தது மன்னிக்க முடியாத குற்றம். எதிர்கட்சிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை போராட்டத்துக்கு தூண்டுகின்றனர். போராட்டத்துக்கு தூண்டுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல்வாதிகள் தங்களது சுய லாபத்துக்காக மாணவர்களை போராட்டத்துக்கு தூண்டுகின்றனர். திருச்சி மாநாட்டில் பெரிய அளவில் கூட்டம் கூடியுள்ளது. பேஸ்புக்கில் கூட்டம் குறித்து தேவையில்லாத கருத்துகளை பரப்புகின்றனர். தி.மு.க மாநாட்டுக்கு கூடிய கூட்டத்தைவிட எங்களுக்கு அதிகமாக கூட்டம் கூடியது. எங்களுக்கு தைரியர் இருந்ததால் தான், எதிர்கட்சிகள் கூட்டம் நடத்திய அதே இடத்தில் நாங்கள் கூட்டம் நடத்திக் காண்பித்தோம். நாங்கள் தேர்தலை தனியாக சந்திப்பதற்கே தயாராகிவருகிறோம். இருப்பினும் தேர்தல் கூட்டணி உயர்மட்ட ஆலோசனைக் குழு கலந்து ஆலோசனை செய்து முடிவுஎடுக்கும்' என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close