Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தும் தினகரன்!

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் வரும் 16-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். 


மாணவி அனிதா மரணத்துக்குப் பின்னர் தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அரசியல் கட்சிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். திருச்சியில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த 9-ம் தேதி நீட் எதிர்ப்புப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதே மைதானத்தில் நீட்டுக்கு ஆதரவாக பா.ஜ.கவினர் நேற்று பொதுக்கூட்டம் நடத்தினர். 
நீட்டுக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே செப்டம்பர் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்திருந்தார். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அந்த போராட்டத்தை ரத்து செய்வதாக கடைசி நேரத்தில் தினகரன் அறிவித்தார்.  இந்தநிலையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி திருச்சியில் வரும் 16-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். தி.மு.க. மற்றும் பா.ஜ.கவினர் பொதுக்கூட்டம் நடத்திய அதே உழவர் சந்தை மைதானத்தில் அந்த போராட்டம் நடைபெற உள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close