Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

58 ஆண்டுகள் பழமையான நீராவி எஞ்சின் ரயில் இயக்கப்பட்டது..!

சென்னை எழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை 58 ஆண்டுகள் பழமையான நீராவி எஞ்சின் ரயில் இயக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். 


இந்திய ரயில்வே துறையின் பாரம்பரியத்தை விளக்கும்வகையில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று நீராவி எஞ்சினுடன் கூடிய ரயில் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அந்த ரயில் இயக்கப்படவில்லை. மாறாக, இன்று இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேப்போல மூவர்ணக்கொடி போல அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ரயில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது.

ஆனால், இதில் பயணிகள் யாரும் ஏற்றப்படவில்லை. ரயில்வேதுறை அதிகாரிகள் மட்டுமே இந்த ரயிலில் ஏற்றப்பட்டனர். இதற்கு இடைப்பட்ட ரயில் நிலையங்களில் நின்ற பொதுமக்கள் அந்த ரயிலை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். பொதுமக்கள் பலரும் ரயிலின் அருகில் சென்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close