Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"தற்கொலை எண்ணம் தவிர்ப்பது எப்படி?" தற்கொலை தடுப்பு தின சிறப்புப் பகிர்வு

மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களையும் இடர்பாடுகளையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளப் பழகுவதுதான் ஆரோக்கியமான உளவியல். உலகில் உயிர்த் துடிப்பு உருவான காலத்திலிருந்து இன்றுவரையிலுமான பரிணாம வளர்ச்சியும் இந்த எதிர்நீச்சல் தத்துவத்தைத்தான் நமக்கு உணர்த்துகிறது. மன ரீதியாக பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் நிகழ்வுகளை நாம் எப்படி எளிதாகக் கடந்து செல்லவேண்டும் என்பது குறித்த பல்வேறு விழிப்பு உணர்வு செய்திகளை இன்றைய தினத்தில் எடுத்துச் சொல்லும்விதமாக இந்த நாளை 'உலக தற்கொலை தடுப்பு தினமாக'க் கடைப்பிடித்து வருகிறது உலக சுகாதார நிறுவனமும் தற்கொலை தடுப்புப்புக்கான சர்வதேச அமைப்பும்.

தமிழகத்தின் தலையில் சமீபத்தில் இடியை இறக்கியது அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைச் சம்பவம்! 

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதாவின் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டைத் தூக்கும் தொழிலாளி. ஏழ்மையானக் குடும்பச் சூழ்நிலையிலும், நன்கு படித்து வந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1200 மதிபெண்ணுக்கு 1176 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். மேற்கொண்டு மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்து தனது குடும்பச் சூழ்நிலையை உயர்த்தும் நோக்கிலிருந்த அனிதாவின் கனவைக் கலைத்தது மத்திய அரசு கொண்டுவந்த 'நீட் தேர்வு' விவகாரம். கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7 பெற்றிருந்த அனிதாவுக்கு, சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நீட் தேர்வில் போதிய கட் ஆஃப் மதிப்பெண் பெறமுடியாமல் போனது.

தற்கொலை தடுப்பு தினம் அனிதா

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான உச்சநீதி மன்ற வழக்கில், ''நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்கவேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும்'' என்று எதிர் மனுதாரராக மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், நீட் தேர்வு அடிப்படையிலேயே தமிழகத்தில், மருத்துவக் கவுன்சிலிங் நடைபெற்றதையடுத்து மனமுடைந்துபோன அனிதா, இன்று திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

நீட் தேர்வு முறையை எதிர்த்துப் போராடிவரும் தமிழக மக்களை இந்தத் துயரச் செய்தி பேரிடியாகத் தாக்கியுள்ளது. இந்நிலையில், மனநல மருத்துவர் மோகன் வெங்கடாசலபதியிடம் இவ்விஷயம் குறித்துப் பேசினோம்...

''பள்ளிகளில், மாணவர்களுக்குப் பாடங்களைச் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு, வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லிக்கொடுக்கத் தவறிவிடுகிறோம் என்பதைத்தான் இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. வாழ்க்கையில் எதிர்பாராத முடிவுகள் நேரும்போழுது அதற்கேற்ப நம்மை நாமே தகவமைத்துக்கொள்கிற பக்குவம் எல்லோருக்குமே வேண்டும். குறிப்பாக, மாணவப் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு இதுபோன்ற விஷயங்களை ஆசிரியர்களும், பெற்றோர்களும் எடுத்துச் சொல்லிப் புரியவைப்பது மிகவும் அவசியம். 

ரேஷன் கடைகளில், இனி அரிசி கிடையாது என்கிறார்கள், இனிமேல் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வுதான் தகுதித்தேர்வு என்கிறார்கள். அரசுகள் எடுக்கின்ற இதுபோன்ற தடாலடி முடிவுகள் சரியா தவறா என்பதையெல்லாம் தீர்மானிக்க நீதிமன்றங்கள் இருக்கின்றன. நம்மைப் பொருத்தவரை இந்த மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை நாமே தகவமைத்துக் கடந்து செல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும்.
ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட், டைம் மேனேஜ் மென்ட், க்ரியேட்டிவ் இமேஜினேஷன் போன்ற விஷயங்களை எல்லாம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க நாம் தவறிவிடுகிறோம். குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில், இந்த மூன்றையும் சொல்லிக்கொடுக்கவேண்டிய பொறுப்பு என்பது பெற்றோர், ஆசிரியர், சமூகம் என மூன்று நிலையிலும் இருக்கிறது. உதாரணமாக, வேறுபெற்றோர்களைப் பார்த்து நம் குழந்தைகளும் இந்தக் கோர்ஸைத்தான் படிக்கவேண்டும்; இதுதான் எதிர்காலத்தில் நமக்குப் பயனளிக்கும் என்ற எண்ணத்தில், தத்தமது குழந்தைகளைப் பாடாய்ப் படுத்துகிறார்கள். இது குதிரைக்கு கண்களைக் கட்டிவிட்டதுபோன்ற ஒரு நிலை.

கல்வி பயில்வதும், மதிப்பெண்கள் பெறுவதும் நம்மை நாமே தரம் உயர்த்திக்கொள்வதற்குத்தானே தவிர... 'மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே லட்சியம்' என்ற மனநிலையை வளர்த்துக்கொள்வது நல்லதல்ல. உலகம் பரந்து விரிந்தது. பல்வேறு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. லட்சியத்தை நோக்கிச் செல்கிறோம்... அது நிறைவேறாத பட்சத்தில், அந்தச் சூழலையும் ஏற்றுக்கொண்டு அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து செல்வதுதான் சரியான உளக்கட்டமைப்பு.

ஏனெனில், இதைவிடவும் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளான நிறைய பெண்கள் அந்தத் துயரங்களைக் கடந்து வந்திருப்பதோடு அடுத்ததொரு துயரம் நடைபெறாவண்ணம் என்னென்ன செய்யவேண்டும் என்ற முயற்சிகளோடு முன்னேற்றப் பாதைகளை நோக்கி வீறுநடை போடுவதையும் நாம் காண்கிறோம். ஆக, இக்கட்டான தருணங்களில், மனதளவில் உடைந்து நொறுங்கிவிடாமல், ஆக்கப்பூர்வ சிந்தனைகளோடு அடுத்தக் கட்டத்தைப் பற்றித்தான் யோசிக்கவேண்டும் என்பதை எல்லோருமே உணர்ந்துகொள்வது நல்லது.'' என்கிறார் விளக்கமாக.

கல்வி மனிதனின் அறிவை மேம்படுத்த வேண்டுமே தவிர, அழிக்கும் கருவியாக மாறிவிடக் கூடாது. ஆனால், இன்றையக் கல்வி முறை குழந்தைகளிடம் போட்டி மனப்பான்மையைத்தான் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையை அதன் இயல்பில் சென்று வெற்றி கொள்வதுதான் தனிமனித திறமை! அதற்கான வழிகாட்டலை வளரும் தலைமுறையினருக்கு ஊட்டவேண்டியது பெற்றோராகிய நமது கடமை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close