சமரசம் காணப்பட்ட 711 வழக்குகளில், சுமார் 12 கோடி ரூபாய் நிவாரணம்..! | 711 cases were Compromised in peoples court

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (10/09/2017)

கடைசி தொடர்பு:18:46 (09/07/2018)

சமரசம் காணப்பட்ட 711 வழக்குகளில், சுமார் 12 கோடி ரூபாய் நிவாரணம்..!

கரூர் மாவட்டத்தில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவால் 711 வழக்களில் சமரச தீர்வு ஏற்பட்டு, சுமார் 12 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணமும் வழங்கப்பட்டிருக்கிறது.


 

 

கரூர் மாவட்ட சட்டப்பணிகள், தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின் படி வங்கி காசோலை வழக்குகள், வங்கி சிவில் வழக்குகள், புரோநோட்டு வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், சிவில், கிரிமினல் வழக்குகள் மற்றும் தொலைபேசி வாராக்கடன் சம்மந்தப்பட்ட வழக்குகளுக்கும் 'தேசிய மக்கள் நீதிமன்றம்' சார்பில் கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை கரூர் கூடுதல் மாவட்ட நீதிபதி திருமதி சசிகலா அவர்கள் துவக்கி வைத்தார்கள். இதில் தலைமை குற்றவியல் நீதிபதி பார்த்தசாரதி, கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி தங்கவேல், முதன்மை சார்பு நீதிபதி டி.வி.மணி மற்றும் அனைத்து நீதிபதிகளும்,வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

மொத்தம் மூன்று அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமர்வுகளில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி நாகராஜ்,வழக்கறிஞர் பாண்டியன், சமூக ஆர்வலர் சாமியப்பன், வங்கி காசோலை விரைவு நீதிமன்ற நீதிபதி ரகோத்தமன், வழக்கறிஞர் சிவக்குமார், சமூக ஆர்வலர் கே.கே.சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும்,குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் சார்பு நீதிபதி அகிலாஷாலினி,வழக்கறிஞர் கே.ஆர்.சீனிவாசன்,சமூக ஆர்வலர் எஸ்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அமர்வுகளில் மொத்தம் 5631 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் 711 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டு, 11,94,24,280 ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட்டது.