வெள்ளம் பாதித்த மக்களுக்கு கலெக்டர் நிவாரணம்!

href="http://கரூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் நிவாரண பொருட்களை" target="_blank"> வழங்கினார். 

 


 

கடும் வறட்சியில் சிக்கித் தவித்த கரூர் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரகாலமாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து சேதத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள காமாட்சிபுரம் காலனி மற்றும் தெற்குப்பட்டி, கஞ்சமாறன்பட்டி பகுதிகளில் தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது, அவருடன் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, பொது சுகாதார துணை இயக்குநர் மரு.நளினி, வட்டாட்சியர் சந்திரசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பின்னர், கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்ததாவது, "காமாட்சிபுரம் காலனியில் வசிக்கும் 23 குடும்பங்களுக்கும், கஞ்சமாறன்பட்டியில் வசிக்கும் 22 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்மழையின் காரணமாக வசிப்பிடங்களில் மழைநீர் தேங்கியுள்ள காரணத்தால், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக வேஷ்டி, சேலை, போர்வை, தலா 10 கிலோ அரிசி ரூ 1000 பணமும் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, பிஸ்கட், ரொட்டிகளும் வழங்கப்பட்டதுடன், தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்காக பொது சுகாதாரத்துறையின் மூலம் சிறப்பு மருத்துவமுகாமும் நடத்தப்பட்டன. சிறப்பு மருத்துவமுகாமும் நடத்தப்பட்டன. மேலும், மழைநீர் வடிவதற்காக வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்போது நிலமை சீராக உள்ளன" என்று பேசினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!