மதுரை மினி  மாரத்தானில் ஓடிய கலெக்டர், போலிஸ் கமிஷனர்

ஆரோக்கியமாக உடலை வைத்துக்கொள்ள மினி மாரத்தான் இன்று மதுரையில் நடந்தது.  இதில் மதுரை கலெக்டர் வீரராகவராவ், சிட்டி போலிஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் நீண்ட தூரம் ஓடி மக்கள் மத்தியில் விழிப்புஉணர்வை ஏற்படுத்தினார்.  ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நடத்திய இந்த மினி மராத்தானில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

மாரத்தான்

நாட்டிலுள்ள இரண்டாம் நிலை நகரங்களில் வாழும் மக்கள் தங்கள் உடல் மீது  அக்கறையை ஏற்படுத்தவும், அதிக உடல் பருமன், மன அழுத்தம்,போன்றவற்றிலிருந்து விடுபடவும், குடும்பத்தோடு நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தவும், இயந்திரத்தனமான பணிச்சுமையிலிருந்து விலகி, மனதையும், உடலையும் ரிலாக்சாக வைத்துக்கொள்ள இந்த மாரத்தான் போட்டியை நடத்துவதாக கூறினார்கள். இந்த போட்டியில் மதுரை கலெக்டரும், போலிஸ் கமிஷனரும் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். கொடியசைத்து தொடங்கி வைத்தது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட தூரம் ஓடி, வந்திருந்த போட்டியாளர்கள், பொதுமக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!