தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழைப்பொழிவு இருந்து வருகிறது. இதனால், தமிழக அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அதேபோல, முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு 905 கன அடியிலிருந்து 960 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 7 செ.மீ. மழையும், திருப்பத்தூர், பாம்பன், உத்தங்குடி, வேலூர் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!