Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி!

சசிகலாவின் கணவர் நடராஜன் சிகிச்சைக்காக பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நடராஜன்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ளார். இந்நிலையில் அவரது கணவர் நடராஜன் நேற்று இரவு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

 கடந்த சில நாள்களாகவே நடராஜன் கல்லீரல் பிரச்னைக்குக் கேரள முறைப்படி சிகிச்சை பெற்று வந்தார். அதில் குணமடையாததால் நேற்று இரவு 9.30 மணியளவில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்குப் பெயர் பெற்ற சென்னை சோளிங்கநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு இடையில் சசிகலா தனது கணவரின் உடல்நிலை காரணமாக பரோலில் தன்னை விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தச் செய்தியை கர்நாடக அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.    

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement