Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜே.என்.யு மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி!

நாடாளுமன்ற தேர்தலைப்போலவே டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் நடக்கும். இந்த ஆண்டுக்கான மாணவப் பேரவைத் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருப்பதால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சார்பு மாணவ இயக்கமாக உள்ள அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)-க்கும் இடசாரி மாணவர் கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது. 

மாணவர் பேரவை

நேற்று வாக்கு எண்ணப்பட்டுமுடிவு அறிவிக்கப்பட்டது. இதில் இடசாரி மாணவக் கூட்டணி முக்கிய நான்கு பதவிகளையும் கைப்பற்றி மெகா வெற்றியைப் பெற்றிருக்கிருக்கிறது. இடசாரி மாணவ அமைப்பின் சார்பில் பேரவைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கீதா குமாரி வெற்றி பெற்றிருக்கிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர்  டி.ராஜா அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவப் பேரவையின் துணைத் தலைவர் பதவிக்கு சிமோன் ஜோயா கானும், பொதுச் செயலாளர் பதவிக்கு துகிலிரா ஸ்ரீகிருஷ்ணாவும், துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு சுபாஷ்ஷு சிங்-யும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

வெற்றி பெற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கீதா குமாரி "இன்னமும் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதும், ஜனநாயகத்திற்கு எதிராக எந்த பாதிப்பு வந்தாலும் மாணவர்கள் அதனைத் தடுப்பார்கள் என்பதும் இந்த வெற்றியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனி, காணாமல் போன நஜிப் பிரச்னை, பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கை குறைப்பு, புதிய விடுதிகள் அமைக்கப்படுவது, பல்கலைக்கழக சுயாட்சி உரிமை குறைப்பு குறித்து மாணவப் பேரவை சார்பில் பலத்த குரல் கொடுக்கப்படும்"என்றார். 

இந்தத் தேர்தலில் நோட்டா ஓட்டு முறை அமல்படுத்தியதில் மொத்த வாக்குகளில் 30% வாக்குகள் நோட்டாவில் விழுந்திருக்கின்றன. இந்த நோட்டா ஓட்டுகள் 'மாணவர்களிடையே பிரிவினையை உருவாக்க வேண்டாம் என்பதற்கான பதிவு' என்கிறார்கள் அங்கு ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close