Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காவிரி, முல்லைப்பெரியாறுக்காக தமிழிசை போராட்டம் நடத்தலாமே' - அன்புமணி


கவிஞரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியுமான திலகபாமாவின் நூல் வெளியீட்டுவிழா, மதுரையில் நேற்று  நடந்தது. தமுக்கத்தில் நடந்துவரும் புத்தகக் கண்காட்சியில், புத்தகத்தை வெளியிட வந்திருந்தார் அன்புமணி ராமதாஸ். மூத்த இலக்கிய ஆளுமையான இளங்குமரனார், புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். 

அன்புமணி

 
இந்த நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, '' நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது, தமிழகத்துக்கு நீட் தேவையில்லை. தமிழக முதல்வர் உள்ளிட்டோர் டெல்லி செல்வது அவர்கள் மீது வழக்குகள் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு மட்டுமே. மக்களுக்காக அல்ல. நீட் தேர்வுக்கு ஆதரவாகப் போராட உள்ள தமிழிசை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், முல்லைப்பெரியாறு பிரச்னைக்கும் போராடலாமே. நீட் தேர்வு வருவதற்கு முன் சமச்சீர்கல்வி கற்ற 3,300 பேர் மருத்துவர்கள் ஆனார்கள். சி.பி.எஸ்.இ-யில் 100 பேர்தான் மருத்துவராக முடிந்தது. இப்பொழுது அப்படியே மாறிவிட்டது. கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்கள் ஆகக் கூடாதா? முதல்வர் எடப்பாடி கலந்துகொள்ளும் விழாக்களில் பள்ளிச் சிறுவர்கள் வதைக்கப்படுகிறார்கள். இனி அவ்வாறு நடந்தால், நானே நேரில் சென்று சிறுவர்களை மீட்பேன். நீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சட்டம் ஒழுங்கு கெடாமல் போராடுங்கள் என்றுதான் சொல்லியுள்ளது. 12-ம் தேதி, பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்''  என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close