எஸ்.வி. சேகரின் கருத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் பதிலடி! | Director Pa.Ranjith's replies for S.VE.Shekher's statement

வெளியிடப்பட்ட நேரம்: 04:25 (11/09/2017)

கடைசி தொடர்பு:10:14 (11/09/2017)

எஸ்.வி. சேகரின் கருத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் பதிலடி!

டந்த சில நாள்களுக்கு முன், தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் சார்பில், மறைந்த மாணவி அனிதாவுக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அனிதாவுக்கு ஆதரவாகவும்  நீட் தேர்வுக்கு எதிராகவும் பல்வேறு இயக்குநர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அப்போது, இயக்குநர் அமீருக்கும் ரஞ்சித்துக்கும் இடையே சிறு கருத்து மோதல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இணக்கமான சூழல் உருவாகி, கூட்டமும் நிறைவுபெற்றது.

பா.ரஞ்சித்

இந்தக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி.சேகர், "தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித், தன் ஜாதியைப் பெருமையாகச் சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்" என்று ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு இயக்குநர் ரஞ்சித், " தலித் என்பது சாதியல்ல, ஆரியம்- சாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல்" என்று நேற்று பதில் அளித்திருந்தார்..

ட்விட்டர் விவாதங்கள்

இதைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர், "தம்பி, தலித் என்று சொன்னது நீங்கள்தான். ஆரியம்-சாதியம் ஒழிக்கும் விடுதலை கருத்தியல், நடைமுறை சாத்தியமில்லா கருத்தியல். காலம் உணர்த்தும்" என்றும், "வெற்றி வேகம் தங்களின் பதில். வயதும் அனுபவமும் கூடக்கூட தெளிவு பெறுவீர்கள். என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார்" என்றும் ரீட்விட் செய்துள்ளார். அந்த நாயகன் யார் என்பதையும் ரஞ்சித்தின் அடுத்த பதிலுக்காகவும் நெட்டிசன்கள் காத்திருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க