Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இன்று சசிகலாவைச் சந்திக்கின்றனர்

தமிழகத்தில் நிலவிவரும் பரபரப்பான சூழ்நிலையில், இன்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்திக்கின்றனர்.


தமிழகத்தில் நடந்துவரும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் தங்களுக்கு முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரைச் சந்தித்துத் தெரிவித்தனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கர்நாடகா மாநிலம் குடகில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

நாளை, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் சார்பாக அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்க தமிழ்ச்செல்வன், கதிர்காமு, மாரியப்பன் கென்னடி ஆகியோர் இன்று சசிகலாவைச் சந்திக்கின்றனர். நாளை, பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள்குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement