Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

courtalam

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஓரிரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 15 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. இந்த மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அணைகளில் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் இந்த ஆண்டு குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து நீங்கி இருக்கிறது. 

தற்போது பெய்த மழையின் காரணமாக, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70.50 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 62 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 36 அடியாகவும் உயர்ந்து இருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தபடியே இருக்கிறது. கடனாநதி அணைப்பகுதியில் 3 மி.மீ மழையும் கருப்பாநதி பகுதியில் 30 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. 

மலைப் பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பற்ற நிலை இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதே போல், ஐந்தருவின் அனைத்துப் பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நீர் வரத்து அதிகம் இருப்பதால் ஐந்தருவியிலும் இன்று காலை முதல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் ஒரே நேரத்தில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close