வெளியிடப்பட்ட நேரம்: 10:04 (11/09/2017)

கடைசி தொடர்பு:10:04 (11/09/2017)

மனிதர்களால் மாநில மரத்துக்கு ஏற்பட்ட அவலநிலை!

மிழகத்தில் நெல்லை -தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமே தேரி என்று அழைக்கப்படும் செம்மண் வனப் பகுதி உள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் சென்னை நகரம் பரப்பளவுக்கு இந்த தேரிக்காடு பரந்து விரிந்து காணப்படுகிறது. செம்மண்ணில் பல்வேறு கனிமங்கள் நிறைந்திருப்பதால், இங்கே டாடா நிறுவனம் டைட்டானியம் தொழிற்சாலை அமைக்க முயன்றது. மக்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக டாடா நிறுவனம் தனது முடிவை கைவிட்டது. செம்மண்ணில் பனை மரங்கள் செழித்து வரக் கூடியவை. தேரிக்காட்டில் லட்சக்கணக்கான மரங்கள் பசுமை போர்த்தியவாறு ஓங்கி நெடிந்து வளர்ந்து நிற்கும். 

அழிந்து வரும் பனை மரங்கள்

இந்த பூமியிலிருந்து கிடைக்கும் தண்ணீரும் சுவை மிகுந்தது. இந்தத் தண்ணீருக்காகப்  பல்வேறு நிறுவனங்கள் ஆங்காங்கே, ஆழ்குழாய் அமைத்து, தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் அதாளபாதாளத்திற்கு குறைந்துள்ளது.  விளைவு  100 அடி ஆழத்துக்கு வேர்பிடித்து வளரக் கூடிய பனை மரத்துக்கே அதன் வாழ்வாதாரமான நீர் கிடைக்காத நிலை. இதனால், ஆயிரக்கணக்கான பனை மரங்கள் காய்ந்து கருகியுள்ளன. 

மாநில மரமான பனை மரத்தைக் காப்பாற்றுவதற்காக இளைஞர்கள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தேரிக்காட்டில் பனைமரங்கள் அழிந்து வருவது வேதனைக்குரியது.  தேரிக்காட்டுக்குள், ஆழ்குழாய் வழியாக தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க