திருச்செந்தூரில் பொன்னாரைச் சந்தித்து கருணாஸ் வைத்த கோரிக்கை

திருச்செந்தூரில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை திருவாடானைத் தொகுதி எம்.எல்.ஏ., கருணாஸ், தனியாகச் சந்தித்து 15 நிமிடங்கள் வரை ரகசியமாகப் பேசியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன், நிதித்துறை இணை அமைச்சராகக் கூடுதல் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூருக்கு வந்தார். கோயில் வளாகத்திலுள்ள விருந்தினர் மாளிகையில், கட்சியினரின் வரவேற்புக்குப் பிறகு, கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு, நாகர்கோயிலுக்குப் புறப்படத் தயாராகும் நேரத்தில், திருச்செந்தூரில்  நடந்த ஒரு திருமணவிழாவில் கலந்துகொண்ட பிறகு, ஓய்வெடுப்பதற்காக கோயில் வளாகத்திலுள்ள தேவர் குடிலுக்கு வந்தார் கருணாஸ். 

karunas ponnaar meet in trichundur

அப்போது, சந்தித்துக்கொண்ட பொன்.ராதாகிருஷ்ணனும் கருணாஸும் சுமார் 15 நிமிடங்கள் வரை தனியாகச் சந்தித்துப் பேசினர். இந்த ரகசிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நாகர்கோவிலுக்குப் புறப்பட்டுச்சென்றார் பொன்னார். இந்தப் பேச்சுவார்த்தைகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ‘’ இது, மரியாதை நிமித்தமான சந்திப்புதான். மதுரை விமான நிலையத்துக்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற நீண்டகால மக்களின் கோரிக்கையை, இந்தச் சந்திப்பின்போது மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி வலியுறுத்தினேன். இதைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாங்கள் பேசவில்லை’’ என்றார். 

இதே போல, ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ-வும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளருமான சண்முகநாதனும் பொன்னாரைச் சந்தித்துப் பேசினார். எடப்பாடி- ஓ.பி.எஸ் அணி மற்றும் தினகரன் அணியினருக்கிடையே நடைபெற்றுவரும் கட்சிப் போராட்டத்தில்,  இவர்களின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.       

Do you like the story?

Please Appreciate the Author by clapping!