ஹெச்.ராஜாவுக்கு அரசுப் பதவியா? மு.க.ஸ்டாலின் ஆவேசம் | M.K.Stalin slams H.Raja

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (11/09/2017)

கடைசி தொடர்பு:11:55 (11/09/2017)

ஹெச்.ராஜாவுக்கு அரசுப் பதவியா? மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சாரண- சாரணியர் இயக்கத்தின் தலைவராக ஹெச்.ராஜாவைத் தேர்ந்தெடுக்க, தமிழக அரசு முயற்சி செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பள்ளி மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் காவி நஞ்சை விதைக்கத் திரைமறைவில் முயற்சி நடப்பதாக ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா திடீரென சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகக் கூறினார். மேலும், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், சாரண- சாரணியர் இயக்கத்தின் தலைவராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜாவைத் தேர்ந்தெடுக்க, தமிழக அரசு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜாவை  பதவியில் அமர்த்த ,தேர்தல் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும் முன்னாள் கல்வி இயக்குநர் மணிக்கு, செங்கோட்டையன் தரப்பிலிருந்து மிரட்டல் வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சாரண- சாரணியர் இயக்கத்தின் தலைவராக ஹெச்.ராஜாவைத் தேர்ந்தெடுக்க முயற்சிப்பதா என்று கண்டனம் தெரிவித்துள்ள அவர், பள்ளி மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் காவி நஞ்சை விதைக்க, திரைமறைவில் முயற்சி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.


[X] Close

[X] Close