Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

96 வது நினைவு தினம் - பாரதியார் படித்த பள்ளியில் மாணவர்கள் உறுதியேற்பு!

பாரதியார் சிலை

பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி அவர் படித்த ம.தி.தா.இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் உறுதியேற்றனர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, தனது கனல் தெறிக்கும் கவிதைகளால் பொதுமக்களிடம் விடுதலை வேள்வியை ஊட்டி வளர்த்தவர், எட்டையபுரத்தில் பிறந்த முண்டாசுக் கவிஞன், சுப்பிரமணிய பாரதியார். அவரது 96 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்குப் பல்வேறு சமூக நல அமைப்பினரும் எழுத்தாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

மாணவர்கள் மரியாதை

உலகப் பொதுசேவை நிதியம் சார்பாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் தலைவர் மரியசூசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர். கணபதி சுப்பிரமணியன், பென்ஷனர் சங்க மாவட்டச் செயலாளர் கணபதியப்பன், மாநிலப் பொருளாளர் ஆறுமுகம், நடிகர் கே.பி.அருணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது, 

பாரதியார் படித்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாரதியார் படித்த வகுப்பறையில் உள்ள அவரது உருவப் படத்துக்குப் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்கள் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close