Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தடையை மீறி போராடும் அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

madurai hc 
 

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே இருந்த பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் வேறு சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். அரசுத்தரப்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், 'ஜாக்டோ ஜியோ' அமைப்பின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தால் அரசுப் பணிகளும், அரசுப் பள்ளி செயல்பாடுகளும் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தடையை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சேகரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளிடம் முறையீடு செய்தார். அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் நடத்த கடந்த வியாழக்கிழமை உயர் நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement