Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலிச்சாமியார்கள் பட்டியல் வெளியீடு!

ந்தியாவில் பெருகி வரும் போலிச்சாமியார்களைக் கட்டுப்படுத்துவதற்காக போலிச் சாமியார்களின் பட்டியலை சாதுக்கள் கூட்டமைப்பான அகில பாரதிய அக்காரா பரிஷத் வெளியிட்டுள்ளது. 

போலிச்சாமியார் பட்டியல் வெளியீடு

அலகாபாத்தில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, வெளியிட்டுள்ள பட்டியலில் போலிச் சாமியர் குர்மீத்தின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. பாலியல் குற்றச்சாட்டில் குர்மீத் 20 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த சாமியார்களின் பெயர்கள் இல்லை.

அகில பாரதிய அக்காரா பரிஷத் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில், அசராம் பாபு, பாபா ஓம், சச்சிதானந்த கிரி, இச்சதாரி பீமானந்த், நிர்மல்ஜித் சிங், ராதே மா, சுவாமி அசீமானந்த், நாராயண் சாய், ஓம் நமக சிவாபாபா, ஆச்சர்யா குஷ்முனி, ராம்பால், பிரகஸ்பதி கிரி, மல்க்கான் சிங் ஆகியோரும் போலிச்சாமியார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, போரிவிலி பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் பெண் சாமியார் ராதே மா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதனால் அவரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். 

பல்வேறு சாதுக்களுடன் கலந்தாலோசித்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். போலிச்சாமியார்களால் பிற சாதுக்கள் முனிவர்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close