Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இப்போ முடியாதுன்னா வேற எப்பவுமே முடியாது!' 36 வயதினிலே தன்னம்பிக்கை பாடும் மஞ்சு ஶ்ரீ

மஞ்சு ஸ்ரீ

ன்றைய பெண்கள் பலரும் குடும்பம், வேலை, சமூகம் எனப் பல பொறுப்புகளை தாங்கிப் பிடிக்கவேண்டிய சூழ்நிலையில் ஒவ்வொரு நொடியும் கடந்துகொண்டிருக்கிறார்கள். அவற்றை எதிர்கொள்ளும்போது பல சவால்களைச் சந்திக்கிறார்கள். பல சமயம் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். இத்தகைய சிக்கல்களுக்கு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சு ஶ்ரீ ஒரு பாடல் வீடியோவை விடையாக அளித்திருக்கிறார். அன்றாடப் பெண்கள் அனுபவிக்கும் மன ரீதியான சிக்கலைகளையும் அதனை எதிர்கொள்வதையும் 'எட்டாத தூரம்' என்ற பாடலாக பதிவுசெய்து இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

‘'என் சொந்த ஊர் கோயம்புத்தூர். சின்ன வயசிலிருந்து பாட்டு கத்துக்கிட்டு இருக்கேன். ஆனால், அப்போ அது நான் விரும்பிச் செய்த விஷயமில்லே. அம்மாதான் பாட்டு கத்துக்க அனுப்பினாங்க. தினமும் அழுதுக்கிட்டேதான் பாட்டு கிளாஸுக்குப் போவேன். அம்மாவை நினைச்சு கோபம் கோபமா வரும். ஆனால், இன்னிக்கு நன்றி சொல்லிட்டிருக்கேன். அம்மா காட்டின அக்கறையால்தான், என் பத்து வயசிலேயே பாடகர் மனோ சாருடன் சேர்ந்து மேடையில் பாடும் வாய்ப்பு கிடைச்சது. அந்த மேடையில,  ரஜினி சார் நடிச்ச ‘தர்மதுரை’ படத்தில் ’ஒண்ணு ரெண்டு மூணு நாலு’ பாட்டை ரெண்டுப் பேரும் சேர்ந்து பாடினோம். அது மறக்கமுடியாத அனுபவம்'' எனச் சிலிர்க்கிறார் மஞ்சு ஶ்ரீ. 

மனோ ஸ்ரீ''அதுக்கு அப்புறம், பல வருஷங்கள் கழிச்சு ஒரு பாடல் வீடியோவை இப்போ ரிலீஸ் பண்ணியிருக்கிறேன். இந்த மாதிரி ஒரு பாடலை வெளியிடணும்னு ரொம்ப நாளாகவே ஆசை. எனக்கு இப்போ 36 வயசாகுது. இந்த வயசுல இப்படியெல்லாம் பண்ணமுடியுமானு தயக்கமா இருந்துச்சு. அப்போ என் அப்பா, 'எதுக்கு தயக்கம்? இந்த வயசிலும் முடியலைன்னா, இனி எப்பவுமே முடியாது'னு சொன்னார். பெண்களுக்கான ஒரு பாட்டா இதை அமைக்க முடிவுசெஞ்சேன்” என்கிறார் மஞ்சு ஶ்ரீ. 

இவரது மற்றோர் அடையாளம், சேலத்தில் நடத்திவரும் லைஃபோலிசியஸ் (lifeolicious) என்ற தன்னபிக்கை அமைப்பு. “நான் கோயம்புத்தூரில் அவினாசிலிங்கம் காலேஜில் சைக்காலஜி மற்றும் இண்டிரியர் டிசைனிங் என டபுள் டிகிரி முடிச்சேன். அந்தச் சமயத்தில் சைக்காலஜி அவ்வளவு பிரபலம் இல்லை. ஆனாலும், இண்டிரியர் டிசைனிங்கைவிட சைக்காலஜி படிக்கத்தான் எனக்கு ஆர்வம் அதிகமா இருந்துச்சு. காலேஜ் செகண்ட் இயர் படிக்கும்போது திருமணம் ஆயிடுச்சி. தொடர்ந்து படிச்சு டபுள் டிகிரியை முடிச்சு, கோல்ட் மெடல் வாங்கினேன். அப்புறம் பல குடும்பத் தலைவிகள்போல போயிட்டிருந்த வாழ்க்கையைத் திருப்பிப்போட்டது அந்த நிகழ்வு'' என சின்ன சஸ்பென்ஸ் நிறுத்தத்துடன் தொடர்கிறார் மஞ்சு ஶ்ரீ. 

''2013-ம் ஆண்டு ஒரு விபத்து நடந்துச்சு. என் கணவரை மூணு வருஷம் ஹாஸ்பிடலிலேயே வெச்சு பார்த்துக்கவேண்டிய சூழ்நிலை. ரொம்பவே மன அழுத்ததுக்கு ஆளாகிட்டேன். கவுன்சிலிங் எடுத்துக்கிட்டேன். கணவரைவிட்டு நகர முடியாததால், போனில்தான் மனத்தத்துவ நிபுணர் கவுன்சிலிங் கொடுப்பார். கொஞ்ச நாளில் நாமும் அதே மாதிரி செய்யாலமேனு தோணுச்சு. எனக்கு கவுன்சிலிங் கொடுத்தவர்கிட்டேயே ஆலோசனை கேட்டேன். கனடாவில் இதுக்கான படிப்பை ஆன்லைனில் கொடுக்கறாங்கனு தெரிஞ்சது. அந்த ஒரு வருஷ படிப்பை வெற்றிகரமா முடிச்சேன். அதுக்குப் பிறகு ஆரம்பிச்சதுதான் ’லைஃபோலிசியஸ்’. பெண்களுக்கு, மாணவர்களுக்கு, தொலைபேசி மூலம் கவுன்சலிங் கொடுக்கிறேன். தன்னம்பிக்கை பயிற்சிப் பட்டறைகள் நடத்தறேன். சேலம், ஈரோடு, சென்னை, சிங்கப்பூர், நார்வே எனப் பல இடங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளை எங்கள் அமைப்புமூலம் நடத்திட்டிருக்கோம். வாழ்க்கையில் எல்லாமே சின்னச் சின்னப் பிரச்சனைகள்தான். நாமதான் அதை நினைச்சி நினைச்சி பெரிய பிரச்னையா மாத்திக்கிறோம். லைஃப் இஸ் ஸோ சிம்பிள்!” என்று தன்னம்பிக்கை புன்னகை வீசுகிறார் மஞ்சு ஸ்ரீ.

இந்த பாடலைக் காண: 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close