Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரனைக் கலாய்க்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ!

கட்சிப் பதவியில் இருப்பவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை நியமித்துவரும் டி.டி.வி.தினகரனை ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ முருகுமாறன் விமர்சித்துள்ளார்.

சசிகலாவின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் புதிய அணியை உருவாக்கினார். இந்த அணி தற்போது முதல்வர் பழனிசாமி அணியுடன் ஐக்கியமாகிவிட்டது. டி.டி.வி.தினகரன் ஓரங்கட்டப்பட்டுவிட்டதால் அவரது ஆதரவாளர்கள் அணிகள் இணைப்பு குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் தினகரன், எடப்பாடி பழனிசாமி அணியினரை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். இதனிடையே, தினகரன் நியமனம் செல்லாது என்றும் அவரால் நியமிக்கப்பட்டவர்களின் நியமனமும் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றிவிட்டது முதல்வர் பழனிசாமி அணி.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனிடையே கடலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், கட்சியில் நியமிக்கப்படுபவர்களுக்கே டி.டி.வி.தினகரனை யாரென்றே தெரியவில்லை. பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த அண்ணாதுரைக்கு தினகரனைப் பற்றி தெரியவில்லை. பொறுப்பு கொடுத்தால் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தினகரன் நியமித்து வருகிறார். அனைத்துப் பகுதிகளிலும் தினகரன் நியமித்த பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்க நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close