Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’இமானுவேல் சேகரன் பெயரை விமான நிலையத்துக்கு வைக்க வேண்டும்!’ - கிருஷ்ணசாமி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு பரமக்குடி செல்லும் வழியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

''இமானுவேல் சேகரன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல் சேகரன் பெயரைச் சூட்டவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்விரண்டையும் தமிழக அரசு உடனே செய்து தர வேண்டும்.

டாக்டர்கிருஷ்ணசாமி

நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்பட வேண்டும். இந்தப் பள்ளியில் படித்தவர்கள் 15,000 பேர் நீட் தேர்வு எழுதி 5,000 பேர் தேர்வு பெற்றார்கள். உச்ச நீதிமன்றம் நீட் தேர்வுக்குப் போராட்டம் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதை மதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். முற்றாக தமிழக அரசு செயல்படவில்லை என்று சொல்லிவிட முடியாது. வருகிற அக்டோபர் 6-ம்தேதி சென்னையில் தேவேந்திரகுல வேளாளரைப் பட்டியலினத்திலிருந்து நீக்க, மாபெரும் பேரணி மாநாடு நடைபெறவுள்ளது'' என்றார்.

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெயரை வைக்க வேண்டுமென்று பி.ஜே.பி தலைவர்கள் சுப்ரமணியன்சாமி, எச்.ராஜா ஆகியோர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், பி.ஜே.பி.ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி அதற்கு எதிராக இமானுவேல் பெயரை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close