ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்..! டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்காவிட்டால், ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று டி.டி.வி.தினகரன் எச்சரிக்கைவிடுத்துள்ளார். 


சென்னை வானகரத்தில் நாளை பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் சசிகலாவைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், 'துரோகிகளின் கீழ் ஆட்சி இருக்கக் கூடாது. இந்த ஆட்சி நீடிப்பது தமிழகத்துக்கு நல்லதல்ல. இந்த துரோக ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. பொதுமக்கள் இந்த ஆட்சி வீழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். எடப்பாடி பழனிசாமி பொய்களைப் பேசுகிறார். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் பதவிக்காக எதையும் செய்பவர்கள். இவர்கள் பொதுமக்களை ஏமாற்றி ஆட்சி செய்துவருகிறார்கள். பதவி இல்லையெனில் ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தூக்கம் வராது. தற்போது நடைபெறுவது அம்மாவின் ஆட்சி இல்லை. முதல்வரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால் நடைபெறும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!