அ.தி.மு.க பொதுக்குழுவுக்குத் தடையில்லை..! சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடைபெறவுள்ள அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்துக்கு எந்தத் தடையுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை வானகரத்தில் நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து, பொதுக்குழுக்கு தடைகோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த வழக்கு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தெரிவித்தார். மேலும் எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். எனவே, இந்த உத்தரவை எதிர்த்து வெற்றிவேல், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு நீதிபதிகள் ராஜிவ் ஷக்தர், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடையில்லை என்று உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!