Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு ஒரு சட்டம்' - நீட் குறித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காட்டம்!

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி, வரும் 13-ம் தேதி அனைத்துக் கட்சி சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம், தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் தி.மு.க. நகரக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

தி.மு.க

இந்தக் கூட்டத்தில், தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கட்சி எனப் பல கட்சிகள் கலந்துகொண்டன. இதில்," நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்; கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும். மக்கள் குரலை அலட்சியப்படுத்தி, மாணவர்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, நம்பவைத்து ஏமாற்றிய மத்திய, மாநில அரசுகளால் மாணவி அனிதா படுகொலை செய்யப்பட்டுள்ளார். எதைப்பற்றியும் கவலைப்படாத பா.ஜ.க மோடியின் மோசடி அரசையும், பினாமி எடுபுடிகளின் குதிரை பேர மாநில அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.


அப்போது பேசிய முன்னாள் தி.மு.க. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "பெட்ரோ கெமிக்கல் என்ற பெயரில், மத்திய அரசு நாகை, கடலூர் மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக் காத்துக்கிடக்கிறது. இந்த நீட் தேர்வால், தாழ்த்தப்பட்ட, மிகவும் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள்தாம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில், வெளிமாநிலத்தவர்களின் ஆதிக்கம்தான் இப்போது உள்ளது. இங்கு எதிர்க்கட்சிக்கு ஒரு சட்டம், ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டமாக உள்ளது. எந்தத் தடை வந்தாலும் கட்டாயம் 13-ம் தேதி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தே தீரும்" என்றார்.
                                

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close