Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இயக்குநர் பா.இரஞ்சித் கருத்து: என்ன சொல்கிறார் சீமான்?

நீட் தேர்வுமூலம் செய்யப்பட்ட அநீதியால் அனிதா தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் மரணத்துக்கு உரிமை ஏந்தல் நிகழ்ச்சியை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அதில், இயக்குநர் பா.இரஞ்சித் "தமிழ் மக்கள் சாதிரீதியில் பிரிந்து கிடக்கும் வரை தமிழ் தேசியம் என்பது வெறும் வார்த்தையாகத்தான் இருக்கும். அது எட்டாக் கனியாகவே இருக்கிறது. அந்த நிலை மாற வேண்டுமென்றால், நாம் அடிப்படையில் மாற வேண்டும். நாமே நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இது, ஒரு அனிதாவின் பிரச்னை அல்ல" என்று பேசினார்.

சாதி

இவ்வாறு பேசியபோது, இயக்குநர் அமீர் இரஞ்சித்துக்கு விளக்கம் சொல்ல முற்பட, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், நிகழ்ச்சி சுமுகமாக நிறைவடைந்தது. ஆனால், இரஞ்சித் பேசிய வார்த்தைகள் பலரையும் விவாதத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவரது பேச்சுக்கு, சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் பெருகின.

இந்நிலையில், இரஞ்சித் பேசியதுகுறித்து பேட்டி ஒன்றில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் விளக்கமளித்துள்ளார். "இரஞ்சித் சொன்னது உண்மைதான். சாதி கடந்து ஒன்றிணைந்தால்தான் நாம் வலிமையடைய முடியும். ஆனால், உலகிலுள்ள அனைத்துத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும் ஒரே விஷயம், மொழிதான். தமிழ், அதுதான் நம் வலிமை. சாதியால் பிரிந்துகிடந்தாலும் மொழியால் ஒன்றிணைந்து இருக்கிறோம். அதுதான் ஈழத்திலிருந்து, அனிதா வரையிலும் நம்மை ஒன்றிணைக்கிறது. 

அவர், விரக்தியில் கோபத்தில் பேசுகிறார். உணர்ச்சிவசப்பட்டுப் போராடுகிறோம் என்று அவர் சொல்கிறார். உணர்ச்சிவசப்படவில்லையென்றால், இங்கே எதையுமே நம்மால் செய்ய முடியாது. எல்லாவற்றுக்கும் உக்காந்து நிதானமாகச் சிந்தித்துச் செயலாற்ற முடியாது. தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுகிறார்கள் என்று இரஞ்சித் சொல்வதை நான் எதிர்க்கிறேன். அவரே உணர்ச்சிவசப்பட்டுத்தான் பேசியிருக்கிறார். அவருக்குத்தான் சுயவிமர்சனம் தேவை" என்று பேசியிருக்கிறார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement