Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பாதுகாப்பான குழந்தைப் பருவம் பாதுகாப்பான இந்தியா' பேரணி தொடங்கியது!

இந்தியாவில், குழந்தைகள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படுவதும்  கடத்தப்படுவதும் அதிகரித்துவருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கன்னியாகுமரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்ட 'பாதுகாப்பான குழந்தைப்பருவம், பாதுகாப்பான இந்தியா' என்ற பேரணியை, விவேகானந்தர் மண்டபத்திலிருந்து கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிவைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பேரணி, 22 மாநிலங்கள் வழியாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, அக்டோபர் 16-ம் தேதி அன்று புதுடெல்லியைச் சென்றடைகிறது.

இந்தப் பேரணியைத் தொடங்கிவைத்து கைலாஷ் சத்யார்த்தி பேசும்போது, "நமது நாட்டில், குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதும், அவர்கள் கடத்தப்படுவதும் தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னையில், நாம் வாயை மூடிக்கொண்டிருக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அச்சம் கொள்கிறார்கள் ஆனால், தவறு செய்தவர்களோ எவ்வித பயமும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த தேசத்துப் பெண் பிள்ளைகள், நமது பிள்ளைகள். சிறுவயதிலேயே பெற்றோரின் பாதுகாப்பில்லாத பிள்ளைகள், பணியிடங்களில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படும் குழந்தைகளைப் பாதுகாக்கவேண்டியது ஒரு சமூகக் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக, இந்தியாவின் தென் கோடி முனையான கன்னியாகுமரியில், சுவாமி விவேகானந்தர் தவமிருந்து ஞானஒளி பெற்ற இடத்திலிருந்து இந்தப் பயணம் புறப்படுகிறது.

இதன்மூலம், ஒவ்வோர் ஆண்மகனும் தான் பார்க்கும் பெண் குழந்தைகளைச் சகோதரி உணர்வில் பாக்க வேண்டும்..அந்த எண்ணத்தை ஏற்படுத்தவும், குழந்தைக் கடத்தல் மற்றும் பாலியல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், 'பாதுகாப்பான குழந்தைப் பருவம், பாதுகாப்பான இந்தியா' என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்தப் பயணம் தொடங்கியுள்ளது" என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். பேரணியில், 'காலா' ரஜினி பதாகைகள்தான் அதிகம் தென்பட்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close