Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரோம் ஷர்மிளாவுக்கு நீதிநாயகம் கிருஷ்ணய்யர் விருது

நீதியரசர் கிருஷ்ணய்யர் பெயரால் சோக்கோ அறக்கட்டளையால் வழங்கப்படும் விருது, மணிப்பூர் போராளி இரோம் ஷர்மிளாவுக்கு நேற்று மதுரையில் வழங்கப்பட்டது. 

கிருஷ்ணய்யர் மகாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விருதை வழங்கி வாழ்த்திப்பேச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பாலபாரதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாமுவேல்ராஜ், இயக்குநர் அமீர், வழக்கறிஞர்கள் செல்வகோமதி, லஜபதிராய், அஜ்மல்கான், திவ்யபாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரோம்ஷர்மிளாவுக்கு விருது

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச்  சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் 16 வருடம் பட்டினிப்போராட்டம் நடத்தி, மக்களின் உரிமைகளுக்காகப் போராடியதை மரியாதைசெய்யும் வகையிலும், இதுவே நம் நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய அகிம்சை வழிப் போராட்டம் என்பதாலும்  இரோம் ஷர்மிளாவுக்கு, மரியாதைக்குரிய கிருஷ்ணய்யர்  விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுமைகள், இரோம் ஷர்மிளாவின் தியாகத்தைப் பாராட்டிப் பேசினார்கள். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், கையொப்பம் பெறவும் இளைஞர்களும் கல்லூரி மாணவ, மாணவிகளும் திரண்டு வந்திருந்தனர். அவர்களின் அன்பில் நெகிழ்ந்துபோனார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close