Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் நள்ளிரவில் வெளுத்துவாங்கிய மழை!

rain, மழை

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கடந்த இரண்டு நாள்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு மேல் கனமழை வெளுத்துவாங்கியது. சமீபத்தில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னையில், இரவு நேரங்களில் விட்டுவிட்டு மழை தொடர்ந்து வந்தது. அதேநேரம், வெயிலின் தாக்கமும் குறைந்தபாடில்லை. பகல் நேரங்களில் கடுமையான அனல்காற்றும் வீசிவந்தது. இந்நிலையில், வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில், காலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காட்சி தந்தாலும், மழை பெய்வதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. வானிலை மையம் தெரிவித்ததுபோல, தற்போது வெப்பச்சலனம் காரணமாக மழை கொட்டித்தீர்த்தது. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், சென்னை மாவட்டத்தில் 395.9 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தைவிட 12 சதவிகிதம் அதிகம். சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கத்தைவிட சிறிது அதிகமாகப் பெய்த போதிலும், சென்னை ஏரிகளில் நீர் மட்டம் குறைவாகவே உள்ளது. இதனால், சென்னை மாவட்டத்துக்குப் போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் நீடித்துவருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close