Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கணிசமாகக் குறைந்த காற்றாலை மின் உற்பத்தி... கவலையில் தென் மாநிலங்கள்!

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக தென் மாநிலங்கள் முழுவதும் காற்றின் வேகம் குறைந்ததால், காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளது

காற்றாலை

தமிழகத்தின் மொத்த மின் தேவை 12,500 மெகாவாட் என்கிற அளவில் உள்ளது. அனல், புனல், சூரிய மின் சக்தி, காற்றாலை, அணு மின் சக்தி மூலமாக இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழக அரசு நடவடிகை எடுத்து வருகிறது. தமிழக அரசுக்குச் சொந்தமான மின் திட்டங்கள் மட்டும் அல்லாமல் மத்திய அரசுடன் இணைந்த திட்டங்கள் மூலமாகவும் மின்சாரம் பெறப்படுகிறது. அதனையும் மீறி தேவை ஏற்படும்போது தனியார் காற்றாலை நிறுவனங்கள், தனியார் அனல் மின் நிறுவனங்களிடமிருந்தும் வெளி மாநிலங்களிடமிருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. 

கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்தபடியே இருந்தது. தமிழகத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 7,598 மெகாவாட் என இருந்தபோதிலும், இந்த ஆண்டு அதிகப் பட்ச உற்பத்தியாக 5,100 மெகாவாட் அளவை எட்டி சாதனை படைத்தது. பின்னர், படிப்படியாக காற்றின் வேகம் குறையத் தொடங்கியதும் மின்சார உற்பத்தியும் குறைந்தபடியே இருந்தது. 

மின் உற்பத்தி 

தற்போது தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி வெகுவாகக் குறைந்து, வெறும் 264 மெகாவாட் அளவாகக் குறைந்து விட்டது. தமிழகம் மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த தென் மாநிலங்களின் காற்றாலை மின் உற்பத்தியும் கணிசமாகக் குறைந்து விட்டது. நேற்றைய நிலவரப்படி, 2013 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஆந்திராவில் 594 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. 3245 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கர்நாடகாவில் 338 மெகாவாட் மட்டுமே உற்பத்தியானது. 

100 மெகாவாட் மின் உற்பத்தி கொண்ட தெலுங்கானாவில் 27 மெகாவாட், 35 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட கேரளாவில் 2 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இப்படி, ஒரே சமயத்தில் தென் மாநிலங்களின் மின்சாரம் உற்பத்தி குறைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கற்றாலை மின் உற்பத்தி திடீரெனக் குறைந்து இருப்பதால் மின் வெட்டு ஏற்படும் ஆபத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close