'தேசிய இனங்களை மத்திய அரசு ஒடுக்க நினைக்கிறது' - ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன்     | The government wants to suppress national groups - Hari paranthaman

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (12/09/2017)

கடைசி தொடர்பு:12:25 (12/09/2017)

'தேசிய இனங்களை மத்திய அரசு ஒடுக்க நினைக்கிறது' - ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன்    

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் எழுதிய 'அரசியலமைப்பு சட்டமும் மதச்சார்பின்மையும்' புத்தக வெளியீட்டுவிழா, நீதிபதி சிவராஜ் பாட்டீல் பவுண்டேஷன் சார்பாக மதுரையில் நேற்று நடந்தது. புத்தகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு வெளியிட்டார். இந்த விழாவில் இரோம் ஷர்மிளா உட்பட சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

நீதிபதிஅரிபரந்தாமன் நூல் வெளியீடு

தோழர் நல்லக்கண்ணு ''மாநில அரசுகளிடம் கேட்காமல், மத்திய அரசு நீட் தேர்வைத் திணித்துள்ளது. மாநில ஆட்சியாளர்கள் பிரிந்து கிடப்பதால், பா.ஜ.க. கால் பதிக்க முயற்சி செய்கிறது. இதனால் தமிழக உரிமைகள் பறிபோகின்றன'' என்றார். அரிபரந்தாமன், ''வடகிழக்கு மாநிலங்களில் பல ஆண்டுகளாக ராணுவம்தான் ஆட்சி செய்கிறது. இது எமெர்ஜென்சியை விட பயங்கரமானது. இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவத்தை நிறுத்தியுள்ளதுபோல கொடுமையானது. இதுபோலவே வடகிழக்கு மாநிலங்கள் இன்றும் உள்ளது. தற்போது தமிழ் நாட்டையும் வட கிழக்கு மாநிலங்கள் போல மாற்றி வருகிறார்கள். தேசிய இனங்களை ஒடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழத்தில் பிஜேபியின் எந்தக் கொள்கையும் எடுபடாது. நீட் தேர்வை நீக்கும் போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க