வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (12/09/2017)

கடைசி தொடர்பு:14:10 (12/09/2017)

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தடை நோட்டீஸ்!

அ.தி.மு.க பொதுக்குழுவுக்குத் தடை விதித்து பெங்களூரு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. 


எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, தினகரன் தரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ., வெற்றிவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. 


இதையடுத்து கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை கோரி, பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பொதுக்குழுக் கூட்டம் நடத்தத்  தடை விதித்து, பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ,தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளரும் கர்நாடக மாநிலச் செயலாளருமான புகழேந்தியின் வழக்கறிஞர்கள், நீதிமன்ற உத்தரவு நகலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலும் அளித்துள்ளனர்.