Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் செய்த ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் 10 ஆயிரம் பேர் கைது!

சிவகங்கையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடம் பேசும் போது, "சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின் அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர்கள் இயக்கங்களும் இணைந்து ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்பினை ஏற்படுத்தினார்கள். இதன் மூலம் புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு மாற்றத்தை அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாகக் கடந்த மாதம் 18-ம் தேதி மாவட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன் பின் ஆகஸ்ட் 5-ம் தேதி காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, சென்னைப் புறநகரில் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தடுப்புகளையும் மீறி சென்னையே ஸ்தம்பிக்கும் வகையில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சேப்பாக்கம் மைதானத்தின் முன்பு குழுமி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்தை சென்னையே அதிரும் வகையில் நடத்தி முடித்தோம்.

அதன் பின்னும் அரசு மவுனம் காத்ததால் ஆகஸ்ட் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்  செய்ததுடன் வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அதன் பின்பும் பழைய நிலையே தொடர்ந்ததால் செப்டம்பர் 7-ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன் சாலை மறியலிலும் ஈடுபடுவோம் என ஜாக்டோ -ஜியோ அறை கூவல் விடுத்தது. அதன் பின் கடந்த 4-ம் தேதி மூத்த அமைச்சர்கள் குழு எங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எங்களது கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். அதனடிப்படையில்  (6.9.2017) ஈரோட்டில் தமிழக முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

எனவே, திட்டமிட்டபடி  வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ- ஜியோ சார்பாக மறியல் நடைபெற்றது. இந்த மறியலில் மாநில அளவில் 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்களும், சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் அரசு ஊழியர்களும் பங்கேற்றார்கள். இன்று மாவட்டத் தலைநகரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த வகையில் சிவகங்கையில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் போலீஸ் வாகனங்களில் கைது செய்யப்பட்டு அலங்கார், மாயா திருமணம் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close