பயிர்க்காப்பீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு!

அனைத்து விவசாயமும் பொய்த்துப்போனபின்பும் பயிர்க்காப்பீடு ஒருபைசாகூட கொடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் குற்றச்சாட்டு வைத்தனர். 

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம், கீழப்பட்டமங்கலம் விவசாயம் அனைத்தும் பொய்த்துப் போய் விட்டது. பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லையென்றும் காப்பீட்டுத் தொகை வழங்க மறுபரிசீலனை செய்யுமாறு  விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.    

"கீழப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள 22 கண்மாய்களும் வறண்டு கிடக்கின்றன. போட்ட விவசாயம் அனைத்தும் பொய்த்துப்போய்விட்டது. ஒரு பிடி நெல்கூட விளையவில்லை. கிணற்றுப் பாசனம் கிடையாது. மழை பெய்து கண்மாய்க்குத் தண்ணீர்வந்து விவசாயம் நடந்தது. ஆனால், தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப்போய்விட்டது. இந்த அளவிற்கு பாதித்த எங்களுக்குப் பயிர்க்காப்பீடு பூஜ்ஜியம் என்று சொல்லுகிறார்கள். எங்களுடைய அடங்கலில் இந்தாண்டு வறட்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் எங்களுக்குப் பயிர்க்காப்பீடு வழங்க இயலாது என்று எதை வைத்துச் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. அனைத்து விவசாயமும் பொய்த்துப்போனதால் பயிர்க்காப்பீடுத் தொகை முழுவதும் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் மாணிக்கம், வெள்ளைக்கண்ணு, மச்சக்காளை, பெரியகருப்பன், முத்தையா உள்ளிட்ட 50 விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!