Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பல்கலைக்கழகத்தில் சேர வளர்மதியிடம் கடிதம் கேட்கும் நிர்வாகம்!

சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் நுழைவு வாயிலில் நின்றுகொண்டு, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்ததின் காரணமாக, பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மாணவி வளர்மதியை சேலம் காவல்துறையினர் கைதுசெய்து  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இது, சமூகப் போராளிகள் மத்தியில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், குண்டர் சட்டம் போடப்பட்ட வளர்மதியை கல்லூரியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்கள். இந்நிலையில், இந்த வழக்கை  விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வளர்மதி மீது போடப்பட்ட  குண்டர் சட்டத்தை ரத்துசெய்தது. அதையடுத்து, வளர்மதி  விடுதலையானார். பெரியார் பல்கலைக்கழகம், வளர்மதி மீது இருந்த குண்டர் சட்டம் ரத்தானதால், அவரை மீண்டும்  பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளுவதாக அறிவித்திருந்தார்கள்.

இதுபற்றி வளர்மதியிடம் கேட்டபோது, ''நான் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். நான் ஜனநாயகத்தின் சட்டதிட்டங்களை மதித்து, இயற்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டுப் பிரசுரம் கொடுத்தேன். இது எந்த வகையிலும் ஜனநாயக நாட்டில் விதி முறை மீறல் கிடையாது. ஆனால், என்னை இந்த அரசு நக்ஸலைட், மாவோயிஸ்ட் என்று கூறி குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைத்தது. அதையடுத்து, பெரியார் பல்கலைக்கழகம் என்னை கல்லூரியைவிட்டு நீக்குவதாகவும், உயர் நீதிமன்றம் என்மீது குற்றம் இல்லை எனத் தீர்ப்பு வழங்கிய பிறகு, கல்லூரியில் என்னை நீக்கியதைத் திரும்பப் பெறுவதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், விடுதலையான பிறகு, நேற்று பெரியார் பல்கலைக்கழகத்துக்குச் சென்று, பதிவாளர் மணிவண்ணனை சந்தித்துப் பேசினார். அப்போது, ''என் மீது அரசு குண்டர் சட்டம் போட்டதால், பல்கலைக்கழகம் என்னை நீக்கம் செய்தது. தற்போது, உயர் நீதிமன்றம்  என்  மீதான குண்டர் சட்டத்தை  நீக்கியதால், பல்கலைக்கழகம் என்னை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு கல்லூரியில் சேர்ந்துகொள்'' என்றார். சரி சார், நான் எழுதிக்கொடுத்துவிட்டு சேர்ந்துகொள்கிறேன் என்று கூறி விட்டு வந்துவிட்டேன்.

பல்கலைக்கழகம் சொன்ன தகவலை எங்கள் வழக்கறிஞரிடம் சொன்னேன். அதற்கு என் வழக்கறிஞர், 'கல்லூரியை விட்டு நீக்கியதும் அவர்கள், சேர்ப்பதும் அவர்கள் நீ எதற்காக எழுதித் தர வேண்டும். நாளைக்கு வருகைப் பதிவேட்டில் பிரச்னை வரும். அப்படி எழுதிக் கொடுப்பதில் சிக்கல் இருப்பதாகச்  சொல்லி விடுங்கள்' என்று கூறியிருக்கிறார். அதையடுத்து, இன்னும் நான் பல்கலைக்கழகத்துக்கு செல்லவில்லை. நாளைக்கோ அல்லது நாளை மறுநாளோ பலகலைக்கழகத்தில் என்னுடைய விளக்கத்தைச் சொல்ல இருக்கிறேன்''  என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement