Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அசல் ஓட்டுநர் உரிமம் விவகாரம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

புதிய வாகனங்கள் வாங்க அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்


வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்றும், புதிய வாகனங்கள் வாங்க அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்றும் தமிழக அரசு அறிவித்தது. வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் முதன்மை அமர்வு, அசல் ஓட்டுநர் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. 

இந்தநிலையில், புதிய வாகனங்கள் வாங்குவதற்கு அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து சென்ன உயர் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விற்பனையாளர்கள் சம்மேளனம் மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், புதிய வாகனம் வாங்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்று தமிழக போக்குவரத்து ஆணையர், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு எதிரானது. வாகனத்தை வாங்குவோரே ஓட்ட வேண்டும் என்ற விதி கிடையாது. எனவே, அந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.  

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சிறுவர்கள், அறக்கட்டளைகள் மற்று நிறுவனங்கள் உள்ளிட்டோர்களது பெயரில் ஓட்டுநர் உரிமம் பெற முடியாது என்பதால் இந்த உத்தரவு நடைமுறைச் சாத்தியமற்றது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், புதிய வாகனங்கள் வாங்க அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரத்துக்குள் தமிழக போக்குவரத்து ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close