Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வுக்கு எதிரான தினகரன் கூட்டம் தள்ளிப்போகிறது!

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி, வருகிற 16–ம் தேதி திருச்சி தென்னூர் உழவர்சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.  

இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டி டி.டி.வி.தினகரன் ஆதரவு அ.தி.மு.க.(அம்மா) மாவட்டச் செயலாளர்கள் சீனிவாசன், மனோகரன், ராஜசேகர் மற்றும் சாருபாலா தொண்டைமான் உள்பட 20–க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் மற்றும்  திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மனுக்கொடுத்தனர்.

இந்நிலையில், ‘‘16–ந் தேதி மற்றொரு அமைப்பினர் உழவர்சந்தை திடலில் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ளதால் அன்றைய தினத்தில் உங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது’’ என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. இதனால் தினகரன் ஆதரவாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதையடுத்து, தினகரன் தரப்பில், ‘‘பொதுக்கூட்டம் நடத்த, அமைச்சர்களின் தூண்டுதலின் பேரில் திட்டமிட்டே அதிகாரிகள் அனுமதி மறுக்கிறார்கள். இதுகுறித்து எங்கள் துணைப் பொதுச்செயலாளரிடம் தெரிவித்துள்ளோம். பொதுக்கூட்ட தேதியை மாற்றி வைக்கலாமா? அல்லது வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தலாமா? என்பது குறித்து அவரே முடிவு செய்வார்’’ என்று அறிவித்தார்.


இந்நிலையில், சற்றுமுன் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில்  டி.டி.வி.தினகரன் தலைமையில் 19-ம் தேதி நீட் தேர்வு எதிர்ப்புக் கூட்டம் நடத்த அனுமதி கோரி மனு வழங்கப்பட்டுள்ளதாக தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

தற்போதைய சூழலில் திருச்சி பொதுக்கூட்டத்தை மிகப் பிரமாண்டமாக நடத்திட தினகரன் தரப்பு திட்டமிடுவதாக கூறுகின்றனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close