Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உணவு பொருள்கள் மீதான புகாரைப் பதிவிட தனி 'வாட்ஸ்அப்' எண்! - ராமநாதபுரத்தில் அறிமுகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில்  உணவுப் பொருள்களின் தரம் குறித்த புகார்களை வாட்ஸ்அப் மூலம் தெரியப்படுத்த பிரத்யோக எண் மாவட்ட ஆட்சியரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் தரம், அவற்றால் ஏற்படும் குறைபாடுகள் போன்றவற்றை களையும் வகையில் பல்வேறு விழிப்பு உணர்வு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் பாலின் தரம்குறித்த பரிசோதனை விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் ஒரு வார காலம் இலவசமாக நடத்தப்பட்ட இந்த முகாமில் நூறு சதவிகிதம் கணிணிமய தானியங்கி கருவி மூலம் பாலின் தரம் மற்றும் அதில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த பரிசோதனைகள் கண்டறியப்பட்டு அதன் முடிவுகள் பொதுமக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
 

உணவு பொருட்கள் தர சோதனை

பச்சிளம் குழந்தைகள் பருகும் பால் முதல் வயோதிகர்கள் உண்ணும் உணவு, பழங்கள் என எல்லாவற்றிலும் கலப்படங்கள் பெருகி வருகிறது. இதனால் உண்டாகும் பாதிப்புகள் ஏராளம் என்ற நிலையில் லாபத்தை மட்டுமே குறியாக கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து கலப்படத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில்  ராமநாதபுரம் மாவட்டத்தில்  உணவுப் பொருள்களின் தரம்குறித்த புகார்களை தெரிவிப்பதற்கென தனி ''வாட்ஸ் அப்" எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

94440 42322 என்ற 'வாட்ஸ்அப்' எண்ணின் மூலம் கோடைக் காலங்களில் விற்பனை செய்யப்படும் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பலம் உள்ளிட்ட பழங்கள், தரமில்லாத குடிநீர் கேன்கள், பால், பால் பொருள்கள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் பதிவிட்டுப் பயன் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவுப் பொருள்கள் குறித்த புகாரைத் தெரிவிக்க பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வாட்ஸ்அப் சேவையை மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிமுகம் செய்துவைத்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close